இரண்டு டிப்பர் வாகனம் நடுவில் சிக்கிய கார் நொறுங்கியது! அதிஷ்டவசமாக தப்பிய இளைஞன்

28shares

இரன்டு டிப்பர் வாகனத்திற்கு நடுவே சிக்கிய காரில் இருந்த இளைஞன் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் ஒன்று பிரேசில் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

பெலோ ஹோரிசோன்ட் ((Belo Horizonte)) என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் நின்று கொண்டிருந்த டிப்பர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு டிப்பரும் காரின் பின்பக்கம் மோதியதில் கார் இரண்டாக மடிந்து அப்பளம் போல நொறுங்கியது.

விபத்தைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதில் சிக்கியிருந்தவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறு சிறு காயங்களுடன் இருந்த அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார்.

இதையும் தவறாமல் படிங்க