இத்தாலியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்! தீவிர நடவடிக்கையில் குதித்துள்ள பொலிஸார்!

377shares

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் இத்தாலியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பை சேர்ந்த ரோஷன் என்ற 53 வயது நபரே இத்தாலியின் லூக்கா நகரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரு குழுக்களுக்கிடையேயான மோதல் ஒன்றையடுத்து இவர் உயிரிழந்திருக்கலாமென இத்தாலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் லேதிக விசாரணைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க