13 பிள்ளைகளைப்பெற்றெடுத்த பெற்றோரா இப்படி? மன்னித்த பிள்ளைகள்!

29shares

தாம் பெற்ற 12 பிள்ளைகளையே சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. எனினும் பெற்றோர்களை மன்னிப்பதாக பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

கணவரான டேவிட் எலன் ரப்பின் ( வயது 57), அவரது மனைவியான லூஸியஸ் (வயது 50 ) அனா என்ற பெற்றோரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

தமது பிள்ளைகளை சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் அவர்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 2 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட தங்களது 13 பிள்ளைகளில் 12 பேரை சித்திரவதைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ரப்பின் தம்பதியரின் 17 வயது பெண் குழந்தை , வீட்டிலிருந்து தப்பித்துச் சென்று அவசர சேவையின் உதவியை நாடியதையடுத்தே பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த பிள்ளைகள், வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டு, சங்கிலிகளால் கட்டப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரப்பின் தம்பதியினர், தங்களது பிள்ளைகளை சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளனர்.

எனினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரப்பின் தம்பதியினருக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தங்களது பெற்றோரைத் தாங்கள் மன்னிப்பதாக சித்திரவதைகளுக்கும், துஷ்பிரயோகத்துக்கும் உள்ளான அவர்களின் பிள்ளைகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த 13 பிள்ளைகளில், 7 வயது வந்தவர்களையும், 6 சிறுவர்களையும் தாங்கள் பராமரிப்பதாக நாடுமுழுவதுமுள்ள செவிலியர்கள், உளவியலாளர்கள் உட்பட 20 பேர் முன்வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க