எலும்புக் கூடாக பிறந்த அதிசய குழந்தை! காப்பாற்ற போராடும் மருத்துவர்கள்

  • Jesi
  • April 20, 2019
41shares

அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் உடலின் பெரும்பாலான பாகங்களில் தோல் இன்றி அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இக் குழந்தையை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

கருவில் குழந்தையின் எடையும் இதயத் துடிப்பும் குறைவாக இருந்ததால் பிரிசில்லா மால்டொனாடோ ((Priscilla Maldonado)) என்ற பெண்ணுக்கு அதி கவனப் பிரிவில் பிரசவம் நடைபெற்றது.

குழந்தையின் முதல் அழுகுரல் கேட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி குழந்தையை பார்த்தபோது அதிர்ச்சியாக மாறியதாகக் கூறுகிறார் பிரிசில்லா. குழந்தையின் தலை, காலின் சில பகுதிகள் தவிர உடல் முழுதும் தோலே இல்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

மரபணுக் குறைபாடு உள்ளிட்டவற்றால் வெகு அரிதாக இதுபோன்ற குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பதுண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

இதையும் தவறாமல் படிங்க