ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் தாறுமாறாக ஓடிய கார்! நடந்தது என்ன?

16shares

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் சக்கரத்தில் சிக்கி 20 வயதான ஒரு பெண்ணும், அவரது 2 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேர் வந்து செல்வதால், ரயில் நிலையம் அமைந்துள்ள வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில், இந்த சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். சிலர் கார் சக்கரத்தில் சிக்கி நசுங்கினர்.

அதன் பின்னரும் தறிக்கெட்டு ஓடிய அந்த கார் ஒரு குப்பை லொறியின் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் 20 வயதான ஒரு பெண்ணும், அவரது 2 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடா்பாக காா் சாரதியை பொலிசாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க