போர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெற்ற பெண் ஊடகவியலாளருக்கு அயர்லாந்தில் நேர்ந்த கதி!

8shares

வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்ட கலவரமொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வடக்கு அயர்லாந்து பகுதியில் உள்ள சிரிகனில் ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிகையாளர் லைரா மெகீ துப்பாக்கி யால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கலவரத்தின் போது ஒரு சில பெற்றோல் குண்டுகளை சிலர் பொலிஸாரின் வாகனத்தின் மீது வீசியுள்ளனர்.

சிலர் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியுள்ளனர். இதனை தீவிரவாத நிகழ்வாக பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.

இந்த வன்முறை குறித்து வடக்கு அயர்லாந்து பிரதமர் லியோ தெரிவிக்கையில்,

''வன்முறை, பயம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றைப் பரப்ப விரும்புபவர்களை நாம் அனுமதிக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

வடக்கு அயர்லாந்தில் இந்த வன்முறைச் சம்பவம் கடந்த ஈஸ்டர் வாரத்திலிருந்தே நடந்து வருகிறது. அங்கிருந்து பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக அங்குள்ள குடிமக்கள் தொடர்ந்து வன்முறையில் ஈட்டுபட்டு வருகின்றனர்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லைரா, அட்லாண்டிக் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 2016 ஆண்டில் ஊடகத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சூட்டு சம்பவம் தொடர்பில் 18,19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க