கவிழ்ந்தது பேருந்து -11 பேர் ஸ்தலத்தில் பலி! தீவிரசிகிச்சைப்பிரிவில் ஏனையோர்!

19shares

கஜகஸ்தானில், பேருந்து கவிழ்ந்த விபத்தில், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 11 பேர் உயிாிழந்தனா்.

கஜகஸ்தான் நாட்டில், அல்மேட்டி-டாஷ்கென்ட் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த இரு வாகனங்கள் மீது மோதி விடாமல் இருப்பதற்காக, பேருந்து ஓட்டுனர் அதை திருப்ப முயன்றபொழுது பேருந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில், உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த, 11 பேர் உயிாிழந்தனா்; மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் தவறாமல் படிங்க