உணவகத்துக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் - 13 பேர் சம்பவ இடத்திலேயே பலி

227shares

மெக்சிகோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட 13 பேர் பலியாகி உள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

மெக்சிகோவின் கல்ப் கடற்கரையை அண்டிய வெரகுரூஸ் பிரதேசத்தில்உணவகமொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் ஒரு குழந்தை உட்பட 5 பெண்களும், 7 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதையும் தவறாமல் படிங்க