வரலாற்றில் முதன்முறையாக அபுதாபியில் பிரம்மாண்டமாக உருவாகும் ஒரு இந்து ஆலயம்

127shares

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒரு பிராந்தியமாக விளங்கும் அபுதாபியில் முதன் முறையாக இந்து ஆலயம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுவாமி நாராயணன் சங்ஸ்தா அமைப்பின் தலைவர் மஹந் சுவாமி மஹராஜ் இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

அந்த இடத்தில் 7 கோபுரங்களைக் கொண்ட மிகப்பெரிய கோயிலை கட்ட போச்சாசன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பு முன்வந்தது.

இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கான இந்திய தூதுவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சமூக அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் வசிக்கும் 2500க்கும் மேற்பட்ட இந்துக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க