கருக்கலைப்புக்கு தடைவிதித்தது அமெரிக்காவில் அலபாமா!

47shares

அமெரிக்க மாநிலமான அலபாமா கருக்கலைப்புக்கு எதிரான சட்ட முன்வரைபொன்றை நிறைவேற்றியுள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் கருக்கலைப்புச் செயல்முறையை மீற முடியாதபடி இந்த வரைபு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கருக்கலைப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக செயற்படும் அமெரிக்க மாநிலமாக அலபாமாவும் மாறியுள்ளது.

பாலியல் வன்புணர்வு மற்றும் முறையற்ற தொடர்புகளினால் ஏற்படும் கருக்கலைப்புகளையும் இந்தச் சட்டம் உள்ளடக்குகிறது.

நீதிமன்றத்தில் இந்தச் சட்டம் கொண்டுவரப்படாமல் தடுக்கப்படலாம் என எதிர்பார்த்துள்ள ஆதரவாளர்கள் மேன் முறையீட்டுக்கான செயல்முறை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பதினாறு பிற மாநிலங்களும் கருக்கலைப்பு தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முயல்கின்றன எனினும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் லூசியானாவில் விதிக்கப்பட்ட புதிய கருக்கலைப்புக் கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளமையும் இந்தத் தீர்ப்பானது இந்த ஆண்டின் இறுதியில் மீளவும் பரிசீலிக்கப்படவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க