உலகிலேயே முதன்முறையாக 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் உருவாகும் பிரமிப்பு!

217shares

உலகிலேயே முதன்முறையாக 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் புதிய தொழில்நுட்பத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது என்ற ஆச்சர்ய தகவல்கள் வெளியாகியள்ளது.

குறித்த ஆச்சர்யமிக்க நீச்சல் குளம் லண்டனில் அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் விரிவாக,

லண்டனில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் உலகிலேயே முதன் பிரமிப்பூட்டும் வகையில் 360 டிகிரி கோணத்தில் இந்த நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடியின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தின் நான்குப்புற சுவர்களும் கண்ணாடியால் ஆனதாகும். அதிக உயரத்தில் இருந்தபடி லண்டனின் அழகை ரசித்துக் கொண்டே குளிப்பதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த சமூக வலைத்தள வாசிகள், புகைப்படங்களை வேகமாக பகிர்ந்ததுடன் இதனுள் செல்வது எப்படி என்று எழுப்பி வந்த கேள்விக்கு குறித்த நீச்சல் குளத்தினை வடிவமைத்த கேம்பஸ் நீச்சல் குளம் கட்டமைப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆலன் கேன்சலே பதிலலித்திருந்தார்.

குறித்த பதிலில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, நீச்சல் குளத்தின் கீழே சுழலும் படிக்கட்டுகள் உள்ளன. இவை நீச்சல் குளத்தின் அடிப்பகுதியில் இருந்து மக்களை கொண்டு செல்லும் எனவும், குளத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்களும் ஒரு பட்டனை அழுத்தினால், அந்த படிக்கட்டுகள் மீண்டும் வந்து அழைத்துச் செல்லும் எனவும் ஆலன் கூறியுள்ளார்.

பார்ப்பவர்களை பிரமிப்படைய செய்யும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!