சுற்றுலாப்பயணிகள் சென்ற பேருந்து விபத்து! இரு இந்தியர்கள் பரிதாபமாக பலி!

27shares
Image

இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப்பயணிகளின் பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் நேற்று முன்தினம் இரவு காத்மாண்டுவில் இருந்து ரவுத்தாட் மாவட்டம் பவுராய் வனப்பகுதியில் பேருந்து சென்ற போது ஓய்வுக்காக சிறிது நேரம் பேருந்து நிறுத்தப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இதனால் பேருந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜய்குமார் ஜெனா (வயது 52), சரண் பி‌ஷால் (54) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க