சவுதி அரேபியாவின் அசீர் பிராந்தியத்தில் உள்ள அப்ஹா விமான நிலையத்தின் மீது ஏமனின் ஹெத்தி கிளர்ச்சியாளர்கள் குறூஸ் ஏவுகணையால் அதிர்ச்சிகரமான தாக்குதல் ஒன்றை இன்று நடத்தியுள்ளனர்
இந்தத்தாக்குதலில் விமான நிலையத்தின் வருகை பகுதியில் இருந்த 26 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
சுமார் 200 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள ஹெத்தி கிளர்ச்சியாளர்களின் நிலையொன்றில் இருந்து ஏவப்பட்டதாக கருதப்படும் இந்த ஏவுகணை வெடித்ததில் விமான நிலையத்தின் கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஹெத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இந்த ரக ஏவுகணைகளை ஈரானே வழங்கியதாக சவுதி மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகியன குற்றஞ்சாட்டியுள்ளன.