வௌிநாடு ஒன்றில் பொலிஸ் அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்பி கன்னத்தில் அறைந்த தமிழர்!

822shares
Image

சிங்கப்பூரின் மத்திய பிராந்தியத்தில் உள்ள எவர்ஸ்டோன் நகரில் வசித்து வரும் முருகேசன் ரகுபதி ராஜா (வயது 25) என்கின்ற தமிழர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நகரில் உள்ள ஒரு பூங்காவுக்கு சென்றுள்ளார்.

மதுபோதையில் இருந்த முருகேசன் ரகுபதி ராஜா, அங்கிருந்தவர்களுக்கு தொந்தரவு அளித்ததோடு மர இருக்கைகள் உள்ளிட்டவற்றை அடித்து நொருக்கியுள்ளார்.

இதுபற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், முருகேசன் ரகுபதி ராஜாவிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர் ஒரு பொலிஸ் அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்பியதோடு, அவரது இரு கன்னத்திலும் மாறி, மாறி அறைந்தார். இதையடுத்து பொலிஸார் மின்சார துப்பாக்கியால் சுட்டு, மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே, ஒருவரது முகத்தில் மிளகாய்பொடியை தூவி பணத்தை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது, பொலிஸ் அதிகாரியை தாக்கியது உள்பட 10 குற்றச்சாட்டுகள் முருகேசன் ரகுபதி ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் அடுத்த மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என தெரிகிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் வழங்கப்படும் என தெரிகிறது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி