ஹொங்கொங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்; உலக மக்களை மெய்சிலிர்க்க வைத்த காட்சி!

372shares
Image

20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் ஹாங்காங்கில் இடம்பெற்ற போராட்டத்தின் போதே இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சீனாவின் ஆதரவுப் பெற்ற ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம். இவர் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதாவுக்கு ஆதரவளித்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை பதவி விலக கோரியும் தொடர்ந்து பல லட்ஷம் மக்கள் கூடி பெரும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று சுமார் 20 லட்சம் பேர் ஒன்று கூடியிருந்தனர்.

இந்நிலையில் போராட்டம் நடத்துவதற்கான மிகப்பெரிய பேனர்களை உயரத்தில் கட்டச் சென்றவர் கீழே விழுந்த நிலையில் காயமடைந்தார்.

அவரை அழைத்துச் செல்வதற்காக அங்கு விரைந்த ஆம்புலன்ஸ், காயமடைந்தவரை ஏற்றிக் கொண்டு நகரத் தொடங்கிய போது நொடிப் பொழுதில் கடல் அலை ஒதுங்கி மீண்டும் கூடுவதுப் போல், 20 லட்சம் பேரும் ஒதுங்கி ஆம்புலன்சுக்கு வழி விட்டனர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க