வானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகொப்டரும், விமானமும்; வெளியான அதிர்ச்சி காணொளி!

59shares

ஆல்ப்ஸ் மலையின் அயோஸ்டா பள்ளத்தாக்கில் ஹெலிகொப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழந்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கோர விபத்து இத்தாலி நாட்டில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

கடந்த ஜனவரி மாதம் ஆல்ப்ஸ் மலையின் அயோஸ்டா பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சிறிய விமானத்துடன், ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டிலும் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர்.

விபத்து நடப்பதற்கு முன் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இருவர் கோ ப்ரோ வகை கேமராவை வைத்திருந்ததால் அதில் பதிவான காணொளியை இத்தாலி பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதையும் தவறாமல் படிங்க