சீனி அதிகம் உண்பவர்களா நீங்கள்? வருகின்றது ஆபத்து!

67shares

சீனி அதிகம் கலக்கப்பட்ட குடிபானங்களை பருகுகின்றவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக ப்ரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனி அதிகம் கலந்த பானங்கள் நேரடியாக புற்று நோயை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

ஆனால் அவ்வாறான பானங்களை அதிகம் பருகுகின்றவர்களுக்கான புற்றுநோய் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தசாப்தங்களில் உலக அளவில் சீனி கலந்த உணவுப் பொருட்களின் நுகர்வு வேகமாக அதிகரித்து வருகிறது.

எனவே சீனி கலந்த பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை குறைக்கின்ற பட்சத்தில், புற்றுநோயை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க