இன்னும் 50 ஆண்டுகளில் மிகப்பெரிய ஆபத்தை பூமி சந்திக்கும்! தற்போது வெளிவந்த நாசாவின் ஆய்வு

32shares

அண்டார்டிக்காவின் த்வைட்ஸ் பனிப்பாறை, வேகமாக உருகி வருவதினால் உலகளவில் கடல்நீர் மட்டம் உடனடி உயரும் என்றும், இதனால் மிகப்பெரிய ஆபத்தைப் பூமி சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் கட்டுப்பாட்டிற்குக் கீழ், அண்டார்டிகா பகுதியில் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு வந்திருக்கிறது.

அண்டார்டிகாவில் வேகமாக உருகிவரும் பனிப்பாறைகளை கொண்டு இந்த ஆய்வின் முடிவு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

தற்பொழுது பனிப்பாறைகள் உருகி வரும் நிலையில் அடுத்த 50 ஆண்டுகளில் நிச்சயம் கடலுக்குள் பாதி நகரங்கள் மூழ்கும் என்று நாசா குழு அறிவித்துள்ளது.

அடுத்த 50 ஆண்டுகளில் நிச்சயம் 50 செ.மீ கடல் மட்ட உயர்வுக்கு வாய்ப்புள்ளது என்று நாசா அறிக்கை தெரிவிக்கிறது.

இதனை உடனே மாற்றம் செய்ய உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

உலக கடல் மட்டம் சுமார் ஐந்து மீட்டர் அதாவது கிட்டத்தட்ட 16 அடி உயரத்திற்குக் கடல் நீர் மட்டம் உயரும் என்றும், மேலும் நிச்சயமாக உலகெங்கிலும் உள்ள பல கடலோர நகரங்கள் மூழ்கடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க