வெளிநாடு ஒன்றில் திருமண நிகழ்வில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொடூர செயல்

  • Dias
  • July 13, 2019
1303shares

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் பலியானதுடன், 40 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நங்கஹார் மாகாணத்தின் பஞ்சிரகம் மாவட்டத்தில் திருமண நிகழ்வொன்றில் அரச சார்பான ஆயுத குழுவொன்றின் தளபதியை குறி வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சிறுவர் ஒருவரை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் தமக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தாலிபான்கள் நிராகரித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பல தாக்குதல்களை கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக காபூல் கல்வி நிலையத்தில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் அதிக அளவில் பொதுமக்கள் கொல்லப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆப்கானிஸ்தானிய அரச பிரதிநிதிகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்ற நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமாதான பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பினரும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க