எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருந்த லண்டன் மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்; பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு!

503shares
Image

ட்யூலிப் என்ற பெயருடன் சுழலும் குளங்கள் மற்றும் உணவகங்களுடன் கூடிய ஐரோப்பாவின் 2-வது மிகப்பெரிய கட்டிடத் திட்டத்தை லண்டன் மேயர் நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் வடிவமைப்பு நகருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும் எனக் கூறி லண்டன் மேயர் சாதிக் கான் அனுமதியை நிராகரித்துவிட்டதாக மேலும் தெரியவருகிறது.

ஆயிரம் அடி உயரத்தில் ட்யூலிப் என்ற பெயருடன் பிரம்மாண்டக் கட்டிடம் 2025-ல் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக லண்டன் அதிகாரிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன் அனுமதி அளித்தனர். நடுப்புறப் பிடிப்புடன் கட்டிடத்தை விட்டு வெளியே நீண்டு சுழலும் வகைளில் நீச்சல் குளங்களும், உணவகங்களும் இதில் அமையவிருந்தன.

ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பார்வையிடக் கூடும் என்றும், 120 கோடி டாலர் வருவாய் அதன் மூலம் கிடைப்பதோடு நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கும் திட்டமாக இது இருந்தது. இந்நிலையில், இந்த கட்டிடத்தின் அனுமதியை நிராகரித்துவிட்டார் லண்டன் மேயர் சாதிக் கான்.

இதனால் பெரும் எதிர்பார்ப்பிலிருந்த லண்டன் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க