ஈரானுக்கு உதவ தயார்; ரஷ்யா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் ஆட்டங்காணும் வல்லரசு!

1163shares

அமெரிக்கா F-35 அதி நவீன போர் விமானங்களை துருக்கிக்கு வழங்க மறுத்ததை அடுத்து துருக்கிக்கு சுகோய் Su-35 வழங்கத் தயார் என ரஷ்யா அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்கக் கூடாது என அமெரிக்கா துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரித்திருந்தது. ஆனால் இதனை மீறி துருக்கி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு அமைப்பை பெற்றது.

இதனால் தாங்கள் துருக்கி F-35 அதி நவீன போர் விமானங்களை விற்கப்போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில், துருக்கி விருப்பம் தெரிவித்தால் சுகோய் Su-35 வழங்கத் தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஈரான் - அமெரிக்காவிடையே பனிப்போர் நிலவிவரும் நிலையில் ரஸ்யாவின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றது.

இதையும் தவறாமல் படிங்க