பிரிட்டன் கப்பலை கைப்பற்றியது எப்படி? ஈரான் வெளியிட்டுள்ள திகில் காட்சி! (வீடியோ இணைப்பு)

628shares

சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது. சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கடத்தி சென்றதாக குற்றம் சாட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைப் பிடிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஸ்டெனா இம்பீரியோ எனப்படும் இங்கிலாந்து எண்ணெய் கப்பல் சவுதிஅரேபியா துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்த போது சிறை பிடிக்கப்பட்டது. அதில் 23 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் இந்தியா, ரஷ்யா, லத்வியா, மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள்.

கப்பல் சிறை பிடிக்கப்பட்ட போது நடந்த தாக்குதலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் தவறாமல் படிங்க