இபோலா நோயை விரைவில் தடுக்க முடியும் : நம்பிக்கை வெளியிடும் விஞ்ஞானிகள்!

14shares
Image

இபோலா நோயானது விரைவில் தடுக்கபடக்கூடியதும் சிகிச்சையளிக்கக்கூடியதுமாக மாறிவிடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பரீட்சைக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளில் இரண்டு மருந்துகளால் உயிர்வாழும் வீதத்தில் அதிகரிப்புக் காணப்பட்டுள்ளதாகஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இபோலா வைரசின் நோய்த் தோற்று அதிகமாகக் காணப்படும் காங்கோ ஜனநாயகக் குடியரசில் நான்கு மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஆரம்பத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களில் 90% க்கும்அதிகமானோர் உயிர்வாழ முடியும் என ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன.

மேலும் காங்கோவில் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க இந்த மருந்துகள் இனிமேல் பயன்படுத்தப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க