நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வு! ஒரு கிராமத்தில் மட்டும் அடித்துச்செல்லப்பட்ட 29 வீடுகள்!

28shares
Image

தென்கிழக்கு மியான்மரில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த அ டை மழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மோன் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. மண் சரிவினாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையினாலும் மீட்புப் பணிகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.

பருவகால மழையினால் மியான்மரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் வீடுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதோடு பாலங்களும் இடிந்து வீழ்ந்துள்ளன.

நாடு முழுவதும் 80,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

பாங் டவுன்ஷிப்பிலுள்ள கிராமம் ஒன்றில் மட்டும் 27 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க