முன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையே மோதல்! முன்னாள் ஜனாதிபதி கைது!

35shares
Image

கிர்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அல்மாஸ்பெக் அட்டம்பாயேவ் மீது கொலைகுற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்தோடு அமைதியின்மையை ஏற்படுத்தியமைக்காகவும் பணயக்கைதிகளாக நபர்களைப் பிடித்து வைத்தமைக்காகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அடம்பாயேவ் கடந்த வாரம் அவரது வீட்டில் வைத்து அதிரடியாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கையின் போது போலிஸ் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான் இரண்டு தசாப்தங்களுக்குள் இரண்டு புரட்சிகளுக்கு முகம் கொடுத்துள்ளதோடு முன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களிலும் சிக்குண்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க