பெண்ணை கத்தியால் குத்திய நபர்...? பொதுமக்களால் தெருவில் பிடித்து வைக்கப்பட்ட நிலையில் கைது!

44shares
Image

அவுஸ்திரேலியாவின் சிட்னி மத்திய பகுதியில் ஒரு பெண்ணைக் கத்தியால் குத்தியதாக நபர் ஒருவர் பொதுமக்களால் தெருவில் பிடித்து வைக்கப்பட்ட நிலையில் அந்த ஆயுதமேந்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அதே தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்குள் மற்றுமொரு பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

தங்களிடம் உள்ள அனைத்து தகவல்களும் இந்த இரண்டு குற்றங்களையும் இணைக்கும் வகையில் காணப்படுவதாக போலீஸ் தலைமை அதிகாரி மிக் புல்லர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் மனநல பிரச்சினைகள் கொண்டவர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் குறித்து போலீசார் ஏற்கனவே அறிந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க