இந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்! வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை! சுருண்டு வீழ்ந்தது விமானம்!

1342shares

அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான பன்முக பயன்பாடு கொண்ட ‘எம்.கியூ.9’ ரக ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் ஆதரவாகவிருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சவுதி அரேபியா தலைமையிலான இந்த கூட்டுப்படைக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையிலேயே அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான பன்முக பயன்பாடு கொண்ட ‘எம்.கியூ.9’ ரக ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமனில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர் களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

இதன் போதே ஏமனின் மத்திய பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள தமர் மாகாணத்தின் வான்பரப்பில் அமெரிக்க ஆளில்லா விமானம் நுழைந்தபோது, ஏவுகணை மூலம் அதனை சுட்டு வீழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சவுதி கூட்டுப் படைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏமனின் வான்வெளியில் படையெடுப்பதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும், ஏனெனில் ஏமன் வானத்தில் அந்நிய விமானங்கள் தோன்றுவதை தடுக்க கிளர்ச்சியாளர்களுக்கு அதிகாரம் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்

“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்