நாட்டையே உலுக்கிய கடுமையான சூறாவளி! பல லட்சக்கணக்கானவர்கள் பாதிப்பு! பல விமான சேவைகள் ரத்து!

32shares

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை ஒரு தசாப்தத்தின் பின்னர் மிகவும் கடுமையான சூறாவளி தாக்கியுள்ளது.

இந்த சூறாவளியின் தாக்கத்தினால் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை மணித்தியாலத்திற்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த சூறாவளி தாக்கியுள்ளது.

இந்த சூறாவளி தாக்கத்தினால் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு புகையிரத சேவைகளும் மணித்தியால கணக்கில் செயலிழந்துள்ளன.

அத்துடன் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிசி தமிழின் இன்றைய பிரதான செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வையுடன் இன்னும் பல செய்திகள்...