அமெரிக்க தூதரக வளாகத்தில் குண்டு வெடிப்பு! தலிபான்களின் ஆட்டம் ஆரம்பம்

242shares

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ராக்கெட் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் செப்டம்பர் 9, உலக வர்த்தக மையத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடந்ததன் நினைவு நாளின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த தாக்குதலால் பெரிய அளவில் பாதிப்பில்லை. யாரும் இதில் காயமடையவில்லை என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க தூதரக வளாகத்தில் பெரும் புகை சூழ்ந்தது.

அமெரிக்கா - தலிபான் இடையில் நடந்து வந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதையடுத்து “அமெரிக்கா எங்களுடன் பேச்சுவார்த்தையை ரத்து செய்ததை ஏற்க முடியாது. பொதுவாக ஒரு போரை நிறுத்த இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று ஜிஹாத் முறையில் சண்டையிடுவது. இன்னொன்று அமைதி பேச்சுவார்த்தை.

இதில் அமைதி பேச்சுவார்த்தை வேண்டாம் என்று அமெரிக்கா முடிவு செய்துவிட்டது. அதனால் நாங்கள் சண்டையை கையில் எடுக்க போகிறோம். அவர்கள் விரைவில் இதற்காக வருத்தப்படுவார்கள். டிரம்ப் அவரின் முடிவுக்காக அனுபவிக்க போகின்றார்” என்று தாலிபான்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இதை உண்மையாக்கும் வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.