இளம் தாய் ஒருவரை அச்சத்தில் உறைய வைத்த காட்சி! ஸ்கானில் பேயாக மாறிய குழந்தை!

219shares

விர்ஜினியாவைச் சேர்ந்த ஐயன்னா என்ற இளம் தாய் ஒருவர் தனது வயிற்றிலிருக்கும் குழந்தை ஆணா? பெணா? என்பதை அறிவதற்காக ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதன் போது ஸ்கேனில் தெரிந்த உருவத்தைக் கண்டு பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஐயன்னா என்ற 17 வயதான இளம் தாய் தனது வயிற்றிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவதற்காக ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அவருக்கு ஸ்கேன் செய்த தாதி, அவரது வயிற்றிலிருப்பது ஒரு பெண் குழந்தை என்று கூறியுள்ளார்.

அந்த குழந்தையின் அழகிய முகத்தையும் காட்டினார். அவர் அப்படியே அந்த குழந்தையின் முகத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வேளை, திடீரென அந்தக் குழந்தை கண்ணை உருட்டி விழித்ததைக் கண்டு திடுக்கிட்டுப்போயுள்ளார்.

தனது கண்களை உருட்டி அந்த குழந்தை பார்ப்பதைக் கண்டு அது ஒரு பேய்க்குழந்தை என்று எண்ணி, பயத்தில் உறைந்து போனார். பின்னர் அவருக்கு ஸ்கேன் செய்த அவரது தாதி, இப்படி ஸ்கேனில் பேய் மாதிரி குழந்தை தெரிவது சாதாரண விடயம்தான், அதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்று கூறிய பின்னரே, அந்தப்பெண்ணுக்கு பயம் நீங்கியுள்ளது.

அந்த படத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ள ஐயன்னா, நான் இப்போது அந்த பேய்க்குழந்தையை அதிகமாக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க