சவுதி தாக்குதல்களை போன்று இன்னும் பல தாக்குதல்கள் உண்டு! எச்சரிக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்!

32shares

ஆளில்லா விமானங்கள் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கியது போல் மேலும் பல தாக்குதல்களை தாம் தொடரவுள்ளதாக யேமேனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளைக் குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதில் சுமார் 50 லட்சம் பரல்கள் கச்சா எண்ணெய் எரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

உலகத்துக்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளமை சுட்டிக்கட்டத்தக்கது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஈரானே பின்புலமாக இருந்து செயற்பட்டதாக அமெரிக்கா தற்போது கூறுகின்றது.

இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான முறுகல் நிலை சவுதி அரேபியாவை மையப்படுத்தி விரிவடையவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்