விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம்! ஐவர் தொடர்பில் உறுதியாகியுள்ள விடயம்!

778shares

மலேஷியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், நேரடியாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீள் உருவாக்கத்திற்காக செயற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மலேஷிய பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் பிரதானி ஐயூப் கான், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.

இதற்கமைய விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கியதாக கடந்த சில தினங்களுக்குள் மலேஷியாவில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழர் மீது அனுதாபம் காட்டுவதில் தவறில்லை எனக் குறிப்பிட்ட மலேஷிய பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் பிரதானி, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்குவது குற்றச் செயலாகும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புள்ளதாக ஐந்து பேரை மலேஷிய காவல்துறையினர் நேற்று முன்தினம் கைதுசெய்திருந்தனர்.

இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக நிதிவசதிகளை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

இதுதவிர விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 7 பேர் அதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!