தனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்!

997shares

துபாயில் தனக்குக் கடன் கொடுத்தவரை கடந்த 2 வருடமாகத் தேடி வருகிறார், பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

பாகிஸ்தானை சேர்ந்தவர் அசத்துல்லா அகமத்ஜான். இவரது தந்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ரஸ் அல் கைமாவில் பிசினஸ் செய்து வந்தார். இது துபாய் அருகில் இருக்கிறது. தனது 19 வது வயதில், கடந்த 2005 ஆம் ஆண்டு, தந்தைக்கு உதவியாக அங்கு சென்றார் அசத்துல்லா. பிசினஸ் நன்றாக டெவலப் ஆக, சில வருடங்களில் மகனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பாகிஸ்தான் திரும்பிவிட்டார் தந்தை. அவ்வப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்து மகனைப் பார்த்து செல்வார். இந்நிலையில், அசத்துல்லாவுக்குத் துபாயைச் சேர்ந்த நுமன் என்பவர் பழக்கமானார். அடிக்கடி குடும்பத்துடன் இவர் கடைக்கு வரும் நுமன், நெருக்கமாக நட்பை வளர்த்துக்கொண்டார்.

இந்நிலையில் அசத்துல்லாவின் பிசினஸ் திடீரென சரிவைக் கண்டது. ஏகப்பட்ட கடன். நெருக்கடிகள். உடனடியாக வங்கிக்குச் செலுத்த அவருக்கு 10 ஆயிரம் திர்ஹாம் (சுமார் ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்) தேவைப்பட்டது. எங்கு கேட்டும் பணம் கிடைக்கவில்லை. அப்போதுதான் அசத்துல்லாவின் நினைவுக்கு வந்தார் நுமன். அவருக்கு போன் செய்து, நிலைமையை சொல்லிக் கடன் கேட்டார். துபாயில் உள்ள தனது வீட்டுக்கு சென்று மனைவியிடம் வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார், நுமன். துபாயில் அதிகப் பரிச்சயம் இல்லாத அவர், அலைந்து திரிந்து எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்து கடன் வாங்கினார். அந்தப் பணம் நுமனின் மனைவிக்குச் சொந்தமானது.

இதை கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிச் செலுத்துங்கள் என்று தெரிவித்தார் நுமன். பிறகு சில வருடங்களில் மீண்டும் பிசினஸ் சூடு பிடிக்கத் தொடங்கியது அசத்துல்லாவுக்கு. அந்த ரூபாயை கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குத் திருப்பிக் கொடுத்து வந்தார். இன்னும் 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே பாக்கி. அதற்குள் தனது போன் நம்பரை மாற்றிவிட்டார், அசத்துல்லா. அவர் வீடும் ஞாபகத்துக்கு வரவில்லை. தனது கடைக்கும் வரவில்லை நுமன். இதனால் கடந்த 2 வருடமாக, அவரிடம் எப்படி கடனைத் திருப்பிச் செலுத்துவது என்று தெரியாமல் அல்லாடி வருகிறார் அசத்துல்லா.

இதையடுத்து துபாயில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றின் அலுவலகத்துக்குச் சென்ற அசத்துல்லா, தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். ‘நான் கஷ்டப்படும்போது உதவிய அவரை என்னால் மறக்க முடியாது. அவருக்கு எப்படியாவது கடனைத் திருப் பிக் கொடுக்க வேண்டும். என்னால் கடனாளியாக வாழ முடியாது. அவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த காலத்தில் இப்படியொரு நேர்மையானவரா? என்று ஆச்சரியப்பட்ட அந்த பத்திரிகை இது பற்றிய செய்தியை வெளி யிட்டு, அவருக்கு உதவியிருக்கிறது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி