மெக்சிக்கோவில் இடம்பெற்ற கடும் மோதல்; எரியுண்ட நிலையில் உடல்கள்!

215shares

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் ஆயுததாரிகளுக்கும் மெக்சிகோ பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

சிறையிடப்பட்ட மெக்சிகோவின் பிரபலமான போதைப்பொருள் கடத்தல் தலைவரான எல்-ஷப்போவின் மகன் ஒவிடியோ குஸ்மான் லூபேஸ் பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டதையடுத்து அவரது குழுவைச்சேர்ந்த ஆயுததாரிகள் இந்தத்தாக்குதலையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

காவற்துறையினர் மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்த ஆயுதாரிகள் பல வாகனங்களை தீயிட்டனர். எரியுண்ட நிலையில் சில உடல்கள் காணப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக வேறு வழியின்றி தமது காவலில் இருந்த ஒவிடியோ குஸ்மான் லூபேஸை காவற்துறையினர் விடுதலை செய்துள்ளனர்.

இந்த தாக்குதல்களையடுத்து மெக்சிக்கோ அரச தலைவர் அன்ரே மனுவல் லூபஸ் பாதுபாப்பு தரப்பினருடன் அவசரக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த வாரம் போதைப்பொருள் கடத்தல் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் காவற்துறையை சேர்ந்த 14 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு