நாளை முடியும் காலக்கெடு! பின்வாங்குவார்களா குர்து போராளிகள்...?

186shares

சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி தாக்குதல் நடத்தியது நில ஆக்கிரமிப்புக்காக இல்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி நடத்திய தாக்குதலை பல நாடுகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று விமர்சித்த நிலையில் எர்டோகன் அதற்கு பதிலளித்தபோது இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து 5 நாள் போர் நிறுத்தத்திற்கு துருக்கி சம்மதம் தெரிவித்த நிலையில் அந்த காலக்கெடு நாளை நிறைவடைகின்றது.

இந்த நிலையில் நாளை மாலைக்குள் குர்து போராளிகள் பின்வாங்கவில்லை என்றால் அவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என துருக்கி எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!