இறுதி சடங்கில் பற்கேற்றவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டிய நிலை! உகண்டாவில் சம்பவம்!

20shares

இறந்த ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்ற 20 பேரில் 6 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று உகண்டாவில் இடம்பெற்றுள்ளது.

ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள உகாண்டாவில் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழைப்பொழிவு பெறுகிறது. தற்போது அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள படேர் மாவட்டத்தின் டோபி கிராமத்தில் இறந்த ஒருவருக்கு நேற்று இரவு இறுதிச்சடங்கு நடைபெற்றது. சுமார் 20 பேர் இரவு முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை மழை பெய்யத் தொடங்கியதால் அருகிலிருந்த மரத்திற்கு அடியில் அனைவரும் ஒதுங்கி நின்றனர். இடி, மின்னலுடன் மழை தீவிரமடைய தொடங்கியது. இதையடுத்து திடீரெனெ மின்னல் தாக்கியதில் அங்கிருந்த 6 பேர் பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த செப்டம்பர் மாதம் உகாண்டாவின் கனுங்கு மாவட்டத்தில் 4 விவசாயிகள் மின்னல் தாக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!