நிகழ்வின் மீது இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி சூட்டில் கலிபோர்னியாவில் 4 பேர் பலி!

22shares

கலிபோர்னியாவில் குடும்ப விருந்து நிகழ்வு ஒன்றின் மீது இலக்குவைக்கப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் 4 பேர் பலியாகி ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.

பிரஸ்னோ நகரில் ஆசிய குடும்பம் ஒன்றின் சார்பாக நடந்த குறித்த விருந்து நிகழ்ச்சியில் விருந்தினர்கள் கால்பந்தாட்ட நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென நுழைந்த ஆயுததாரி அவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள அனைவரும் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் காவற்தறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க