போர்க்களமாக மாறிய பல்கலைக்கழக வளாகம்! மிக தீவிரமாகியுள்ள ஹொங்கொங் நிலைமை!

53shares

ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் இன்று அதன் பல்தொழினுட்ப பல்கலைக்கழக வளாகத்தையும் போர்களமாக மாற்றியிருந்தது.

குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சிலதினங்களாக முற்றுகையிட்டு இருந்த போராட்டக்காரர்களை கைது செய்வதற்காக காவற்துறையினர் வளாகத்துக்குள் நுழைய முனைந்த நிலையில் அங்கிருந்து தப்பியோட முனைந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவற்துறை அவர்களில் பலரை கைதுசெய்துள்ளது.

போர்களமொன்றை நினைவுபடுத்தக்கூடிய அதிதீவிர வன்முறைக் காட்சிகளை இப்போது ஹொங்கொங்கில் அடிக்கடி காணமுடிகிறது.

அந்த வகையில் தற்போது இந்த வன்முறைகள் அங்குள்ள பல்தொழினுட்ப பல்கலைக்கழகவளாகத்தையும் ஆட்டிப்படைத்துள்ளது. பல்தொழினுட்பபல்கலைக்கழகவளாகத்துக்குள் முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்களை கைது செய்வதற்காக இன்று பிற்பகலில் பல தடைகளைத் தாண்டி ஹொங் கொங் காவற்துறையினர் சென்றதையடுத்து நிலைமை மோசமானது.

முன்னதாக நேற்றிரவு வன்முறைகள் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலைக்கு முதல் பல்கலைக்கழகவளாகத்துக்குள் நுழைய காவற்துறையினர் முயற்சிகளை செய்தனர். ஆயினும் அவர்களால் இன்று பிற்பகல்தான் இதுசாத்தியப்பட்டது.

பல்தொழினுட்ப பல்கலைக்கழகவளாகத்தை முற்றாக முடக்கிய காவற்துறை அதற்குள் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை செய்ய போராட்ட்ககாரர்களும் பதிலடி கற்களை வீசியும் அம்புகளை ஏவியும் வன்முறைகளை செய்தனர்.

இந்த நிலையில் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழகவளாகத்தை விட்டு தப்பிக்க முயன்றபோது அவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. வளாகத்துக்குள் இன்னும் நூற்றுக்கணக்கானோர் இருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டனர்.

காவற்துறையின் ஊடகத் தொடர்பாடல் அதிகாரியொருவர் போராட்டக்காரர்கள் ஏவிய அம்பு ஒன்றால் தாக்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து காவற்துறையின் சீற்றம் அதிகரித்துள்ளது.

நிலைமை மீறினால் சீன ராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் உட்பட தனது படைப்பலத்தை பிரயோகிக்கும் என எச்சரிக்கபட்டுள்ளதால் ஹொங்கொங் நிலைமை மிகத்தீவிரமாகவே உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!