வாடிக்கையாளர்களுக்கு புதிய நடைமுறை! சீனாவில் கட்டாயமாகும் சட்டம்!

7shares

சீனாவில் செல்லிடப்பேசி சேவைகளுக்கு பதிவுசெய்யும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தமது முகங்களை ஸ்கான் எனப்படும் படிமவருடி முறைமையில் பதிவு செய்ய வேண்டிய முறை நேற்றில் இருந்து கட்டாயமாக்கப்படுகிறது.

சீனாவில் உள்ள கோடிக்கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இது அவசியமான நடவடிக்கை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையவெளியில் சஞ்சரிக்கும் குடிமக்களின் சட்டபூர்வ உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க விரும்புவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த நடவடிக்கை தீவிரமான கண்காணிப்பை வலுப்படுத்துமென கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...