பிரதமரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஈராக்கிய நாடாளுமன்றம்!

1shares

ஈராக்கியப்பிரதமரின் பதவி விலகலை ஈராக்கிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.

ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஈராக்கில் அரச எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப்போராட்டத்தில் 400க்கும் அதிகமானவர்கள் பலியாகியதையடுத்து ஈராக்கின் ஷியா மதகுருமார்கள் பிரதமர் மஹ்தி பதவிவிலக வேண்டுமென கடுமையாக வலியுறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து ஈராக்கிய பிரதமர் கடந்த வாரம் பதவி விலகுவதாக அறிவித்த நிலையில் அப்துல் மஹ்தியின் பதவி விலகலை ஈராக்கிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...