பூமியின் வரலாற்றில் இந்த ஆண்டு தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

17shares

உலக வானிலை மையம் நடத்திய புவி வெப்பமயமாதல் தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் உலகம் இயந்திரமயமாக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளில் 2019 ஆம் ஆண்டில்தான் புவி வெப்பமயமாதல் மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

கடல் நீரில் இருந்த அமிலங்களின் நச்சு கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக்காட்டிலும் தற்போது 25 சதவீகிதம் அதிகமாகிவிட்டது.

மேலும், பல பகுதிகளில் புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் நீரின் மட்டம் உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் உயர்ந்துள்ளது.

2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் ஒரு கோடி (10 மில்லியன்) மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அவற்றில் 70 லட்சம் பேர் (7 மில்லியன்) மழை, வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை பேரிடர்களினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இயற்கை பேரிடர்களால் வசிப்பிடங்களை விட்டு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை 2 கோடியே 20 லட்சமாக (22 மில்லியன்) உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நூறாண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் அனல் காற்று போன்ற பேராபத்துக்கள் தற்போது அடிக்கடி நிகழ்கின்றன.

அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பியாவிலும் இந்த ஆண்டு மிகவும் அதிகமாக அனல் காற்று வீசியுள்ளது என இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதால் 2010 முதல் 2019 வரையிலான ஆண்டுகள் புவியின் மிக அதிக வெப்பமயமான ஆண்டாகும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி