மைத்திரியின் திடீர் அறிவிப்பால் மீண்டும் குழப்பத்தில் மகிந்த! அடுத்து என்ன?

  • Dias
  • December 13, 2019
301shares

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

17 கட்சிகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய பொதுத்தேர்தலில் கதிரை சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ் அறிவிப்பு மகிந்த ராஜபக்சவிற்கு பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
loading...