எவரும் தப்பிக்க முடியாது! அனைவருக்கும் தண்டனை உண்டு - ஈரான் ஜனாதிபதி சீற்றம்

215shares

விமானத்தை வீழ்த்திய சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘உக்ரேன் விமான விபத்து சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இச்சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய அனைவரும், கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்’ என கூறினார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரேன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் உட்பட 176 பயணிகள் உயிரிழந்தனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
loading...