காணொளியை வெளியிட்ட நபரை கைது செய்தது ஈரான்! பின்னணி என்ன?

212shares

உக்ரேனிய விமானத்தை ஈரானிய ஏவுகணை தாக்கும் காணொளியை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உக்ரேனிய விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அது விபத்தல்ல மனித தவறினால் ஏற்பட்டது என்றும், ஈரானிய இராணுவத்தினரே தவறுதலாக விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், உக்ரேனிய விமானத்தை ஏவுகணை தாக்கும் காணொளி ஒன்று சமூக ஊடங்களில் வெளியாகியிருந்தது. குறித்த காணொளியின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் பின்னர் தாக்குதல் நடத்தியது ஈரான் தான் என்பதை உறுதிப்படுத்தினர் சர்வதேச நிபுணர்கள்.

இதனையடுத்தே ஈரானும் தனது தவறை ஒத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனையடுத்து அக்காணொளியை வெளியிட்ட நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறித்த நபரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ஏவுகணை தாக்கும் வீடியோவை வெளியிட்டவர் ஈரானிய புரட்சிகர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, குறிப்பிட்ட வீடியோவை முதன்முதலில் வெளியிட்ட ஈரானிய பத்திரிகையாளர் ஒருவர் நான் பாதுகாப்பாக இருக்கின்றேன் என தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரானிய அதிகாரிகள் தவறுதாலாக வேறு ஒரு நபரை கைது செய்துள்ளனர். எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வருகின்றன, விமானம் தொடர்பில் அவர்கள் தவறுதலாக வேறு ஒருவரை கைதுசெய்துள்ளனர், என டுவிட்டரில் பதிவு செய்துள்ள அந்த பத்திரிகையாளர் வீடியோவை வழங்கிய நபர் பாதுகாப்பாக உள்ளார், ஈரானிய புரட்சிகர காவல்படையினர் இன்னொரு பொய்யை உருவாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

திருகோணமலை மூதூர் தேர்தல் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

திருகோணமலை மூதூர் தேர்தல் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்