கனடா பிரதமர் உடனடி அறிவிப்பு! ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 25, 000 டொலர் வழங்க முடிவு

937shares

ஈரான் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானத்தில் உயிரிழந்த கனேடியர்கள் 57 பேரின் குடும்பங்களுக்கும் தலா 25,000 டொலர் வழங்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் மற்றும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் ஆகியோர் ஓமானின் மஸ்கட்டில் சந்திப்பில் ஈடுபட்டனர்.

சந்திப்பை தொடர்ந்து ஷாம்பெயின் அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையின் படி, கனடா மற்றும் பிற பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ஈரானின் முழு ஒத்துழைப்பு வழங்குவது, தூதரக சேவைகளை வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சர்வதேச தரங்களை உறுதி செய்வதில் உதவுதல் மற்றும் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையில் பங்கேற்பது பற்றி இருவரும் விவாதித்தனர்.

ஈரான் கருப்பு பெட்டி தரவுகளை வெளிப்படையாக பகுப்பாய் செய்ய ஒப்புக் கொண்டது, மேலும் ஷாம்பெயின் மற்றும் ஜரிஃப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது உட்பட ஈரானின் கடமைகள் பற்றி விவாதித்தனர்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பகுதியில் பதற்றங்களை குறைக்க ஷாம்பெயின் ஜரிஃப்பை வலியுறுத்துவார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட 57 கனேடியர்கள் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 25,000 டொலர்களை வழங்கப்படும் என அறிவித்தார். இது, இறுதிச்சடங்கு ஏற்பாடுகள், பயணச் செலவுகள் மற்றும் பிற செலவுகளை நிதி ரீதியாக சமாளிக்க உதவும்.

ஆனால், ஈரானிடமிருந்து இழப்பீட்டை பெறும் முயற்சியை ஒருபோதும் கனடா கைவிடாது என குறிப்பிட்டார்.. ஈரான் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

கடந்த 8ம் திகதி தெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஈரானிய ஏவுகணைகளால் உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 167 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் இறந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் ஈரான் (82), கனடா (57) உக்ரைன் (11), சுவீடன் (10), ஆப்கானிஸ்தான் (4), பிரித்தானியா (3) ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி