வெளிநாடு ஒன்றில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்! இலங்கை உள்ளிட்ட அனைவருக்கும் கொண்டாட்டம்

299shares

2022இல் கட்டார் நாட்டில் கால் பந்து உலக கோப்பை நடக்க இருக்கிறது. இந்த கால்பந்து போட்டிக்காக, கட்டார் அரசு பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை பார்க்கும் மத்தியக் கிழக்கு நாடுகளில் கத்தாரும் ஒன்று. சுமாராக 2 கோடி வெளிநாட்டவர்கள், அங்கு வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த பணியாளர்கள், நாட்டை விட்டுச் செல்லும் போதும், நாட்டுக்குள் வரும் போதும், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அனுமதி பெற வேண்டும். இந்த முறையை கஃபாலா (Kafala) என்கிறார்கள்.

அதோடு கட்டார் நாட்டில் இருந்து வெளியே செல்லும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு விசா எடுக்க வேண்டி இருந்தது.

இந்த கடுமையான தொழிலாளர் சட்ட திட்டங்களை எல்லாம் மாற்றுவோம் என கட்டார் அரசாங்கம் கடந்த ஆண்டில் சொல்லி இருந்தார்கள். அவர்கள் சொன்னதைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து, கட்டார் நாட்டுக்கு வந்து வேலை பார்ப்பவர்கள் (சிவில் சர்வெண்ட்கள், எண்ணெய் மற்றும் கேஸ் துறையில் பணியாற்றுபவர்கள், கட்டார் அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் கட்டார் ஏர்வேஸில் பணியாற்றுபவர்கள் உட்பட) இனி கத்தார் நாட்டை விட்டு வெளியே செல்லும் போது விசா எடுக்க வேண்டாமாம்.

அதோடு கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 16, 2020) இன்னொரு அதிரடி மாற்றத்தையும் கொண்டு வந்து இருக்கிறது கட்டார் அரசு.

இனி கட்டாரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களின் அனுமதி இல்லாமலேயே நாட்டுக்குள் வரவோ அல்லது வெளியே செல்லவோ முடியுமாம்.

இந்த செய்தியை கட்டார் அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் செயலர் முகம்மது அல் ஒபைத்லி (Mohamed al-Obaidly) AFP பத்திரிக்கையிடம் சொல்லி இருக்கிறார்.

இது போல தொழிலாளர்கள் தொடர்பான பல மாற்றங்களை மேற்கொண்டு கொண்டு வர இருக்கிறார்களாம்.

இந்த புதிய விதிப்படி, கத்தார் நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள், கட்டார் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு, தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம், தான் வெளியேற இருப்பதை தெரியப்படுத்தினால் போதுமாம். எனவே இனி கட்டார் நாட்டுக்குள் செல்வதற்கும், வெளியேறுவதற்கும் கெடுபிடிகள் இருக்காது.

ஒரு நிறுவனத்தின் டாப் 5 சதவிகித ஊழியர்களுக்கும் மட்டும் இந்த விதிகள் பொருந்தாதாம். எனவே ஒரு நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதி பெற்ற பின் தான் கட்டார் நாட்டை விட்டு வெளியேற முடியுமாம். இதனால் அங்கு தொழிலுக்கு செல்வோர் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

அதோடு, கட்டாரில் குறைந்தபட்ச கூலியை 200 அமெரிக்க டாலராக விரைவில் நிர்ணயிக்க இருக்கிறார்களாம். இந்த புதிய விதிமுறையை, கத்தாரில் வேலை பார்க்கும் பல நாட்டு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்றுக் கொண்டு இருக்கிறார்களாம். பேசாம பொட்டி படுக்கையோடு கத்தாருக்கு போயிடுவோமா..?


Tags : #Qatar #Media
இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்