சீன மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம்! நெஞ்சை உலுக்கும் காட்சிகள் வெளியானது

505shares

சீனாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். பெரும் துயரத்தை அந்நாட்டு மக்கள் சந்தித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் உலகில் 15 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளதுடன், இதன் பாரதூர தன்மை தொடர்பில் தாங்கள் சிந்திக்கவில்லை என்றும், அதற்காக வருத்தமும் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் உலகின் பல நாடுகளுக்கும் இந்நோய் தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது.

இலங்கையிலும் சீனப் பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சீனாவில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் திடீர் திடீரென் மயக்கம் போட்டு விழுவதும் அவர்களை பாதுகாப்பான கவசமணிந்து கொண்டு மீட்புக்குழுவினர் மீட்பது போன்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. உழைப்புக்கு பெயர் போன சீனர்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் இந்நிலை தொடர்பில் உலக நாடுகள் பலவும் தங்களின் அனுதாபத்தை தெரிவித்துவருகின்றன.

எவ்வாறாயினும் இந்நோய்க்கான எதிர்ப்பு மருந்தினை கண்டுபிடிப்பதற்காக சீன மருத்துவர்கள் இரவு பகலாக உழைத்துவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags : #Covid-19 #China #
இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்