கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

497shares

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மேலும் 17 நாடுகளில் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளையே கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.

இந்நிலையில் கொடிய கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இந்த கொடிய வைரஸ் மேலும் 17 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மாத்திரம் 5 ஆயிரத்து 974 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 26 பேர் மரணித்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தாய்லாந்தில் 14 பேரும், ஹொங்கொங்கில் 8 பேரும், ஜப்பானில் 6 பேரும், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் மெகோ முதலான நாடுகளில் தலா 5 பேரும், மலேசியா, தென்கொரியா மற்றும் தாய்வானில் தலா 4 பேரும், ப்ரான்ஸில் 3 பேரும், வியட்நாமில் 2 பேரும் கொறோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், கனடா, ஜேர்மனி, கம்போடியா, நேபாளம் மற்றும் இலங்கை முதலான நாடுகளில் தலா ஒவ்வொரும் இந்த வைரஸ் தாக்கமுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம், சீனாவுக்கு விசேட குழுவொன்றை அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
loading...