சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் இடை நிறுத்தியது பிரிட்டிஷ் எயார்வேஸ்!

94shares

சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இடை நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கினால் அந்நாட்டில் 132 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து சீனாவில் தங்கியிருந்த தமது நாட்டுப் பிரஜைகளை பல நாடுகள் திருப்பி அழைத்துள்ளன.

இலங்கை மாணவர்கள் பலர் சீனாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், சீனாவிலிருந்து மற்றைய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுப் பரவுவதை தடுப்பதற்கான வழிகளை மற்றைய நாடுகள் தீவிரமாக ஆராய்ந்துகொண்டிருக்கிறன.

இதற்கிடையில் சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இடை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...