தனிமைப்படுத்தப்படுகிறதா சீனா? ஏழு சர்வதேச விமானசேவை நிறுவனங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

87shares

சீனாவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதை அடுத்து ஏழு சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் சீனாவுக்கான தமது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இதன்படி 'ஏர் பிரான்ஸ்', 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்', 'கேத்தே பசுபிக்', 'ஃபின் ஏர்', 'லயன் ஏர்', '' யுனைடெட் ஏர்லைன்ஸ் '' மற்றும் '' யூரல்ஸ் '' போன்ற ஏழு விமான நிறுவனங்களே தமது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

சீனா தனது மக்களுக்கு தங்கள் பயணங்களை இரத்து செய்யவும், ஒரு குழுவாக வெளிநாட்டு பயணத்தை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது, சில நாடுகள் சீனாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன.

இந்தநிலையிலேயே மேற்படி ஏழு சர்வதேச விமானசேவை நிறுவனங்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
loading...